மீண்டும் காத்திருப்பில் கோவை கமிஷனர் சிவனாண்டி

அதிமுக ஆட்சிக்காலத்தில் கிட்டத்தட்ட அதிமுககாரர் போலவே செயல்பட்டார் சிவனாண்டி என்பது அப்போது எதிர்க்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டு.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுகவுக்காக வாக்கு சேகரிக்கும் அளவுக்கு இறங்கி சர்ச்சையிலும் சிக்கினார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் உருப்படியான பதவியில் அவர் அமர வைக்கப்படவில்லை. சமீப காலமாகத்தான் ஆளுங்கட்சியின் நல்லெண்ண வட்டத்திற்குள் அவர் வந்தார்.
சில வாரங்களுக்கு முன்பு அவர் கோவை போலீஸ் ஆணையராக நியமிக்கப்பட்டார். இந்தப் பதவியில் அவர் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வந்து கோவை மக்களின் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார்.
முதல் தகவல் அறிக்கையை வீடு தேடி போலீஸாரே வந்து தருவது, ஆதரவற்ற குழந்தைகளை போலீஸாரே தத்தெடுத்து வளர்ப்பது என அசத்தலாக பணியாற்றி வந்தார் சிவனாண்டி.
இந்த நிலையில்தான் வந்து சேர்ந்தது இடைத் தேர்தல். தொண்டாமுத்தூர் தொகுதியின் பல பகுதிகள், கோவை மாநகர எல்லைக்குள் வருகிறது. இந்த நிலையில், சிவனாண்டியை மாற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து சிவனாண்டி மாற்ற்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆணையர் பொறுப்பை மேற்கு மண்டல ஐஜி பிரமோத் குமார் தற்காலிகமாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திற்கும், சிவனாண்டிக்கும் இடையே கடந்த 2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலிருந்தே டக் ஆப் வார் நடந்து வருகிறது.
அந்த தேர்தலின்போது அதிமுகவுக்கு சாதகமாக செயல்பட்டார் என்ற புகாரைத் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் இனிமேல் தேர்தல் தொடர்பான பணிகளின்போது சட்டம், ஒழுங்கை கவனிக்கும் பொறுப்பில் சிவனாண்டி இருக்கவே கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.
கடந்த ஆண்டு லோக்சபாத் தேர்தலுக்கு முன்பாக கோவை டிஐஜியாக நியமிக்கப்பட்டார். ஆனால் லோக்சபாத் தேர்தலைக் காரணம் காட்டி அவர் மாற்றப்பட்டு ரயில்வே டிஐஜியாக்கப்பட்டார்.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் கோவைக்கு கமிஷனராக மாற்றப்பட்டு கடந்த ஜூன் 4ம் தேதி பொறுப்பேற்றார். இந்த நிலையில் இப்போது இடைத் தேர்தல் குறுக்கிட்டுள்ளதால் மறுபடியும் மாற்றப்பட்டு விட்டார் சிவனாண்டி.
இப்போது மாற்றப்பட்டாலும் கூட தேர்தல் முடிந்த பின்னர் மீண்டும் கோவை ஆணையராக சிவனாண்டியே பொறுப்பேற்பார் எனத் தெரிகிறது.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன?











Click it and Unblock the Notifications