கோவை கிளப்களில் ரெய்டு- கஞ்சா சிக்கியது
கோவை: கோவையில் அதிகாலையில் பொழுதுபோக்கு கிளப்களில் நடந்த அதிரடி சோதனையில் 900 கிராம் கஞ்சா சிக்கியது. 2 கிளப்களின் உரிமையாளர்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை புறநகர்ப் பகுதியில் உள்ள ராயல் கிளப் மற்றும் கிளாசிக் கிளப் ஆகியவற்றில் அதிகாலையில் போலீஸார் திடீர் சோதனையை நடத்தினர்.
இந்த கிளப்களில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடைபெறுவதாக தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது. ஏராளமான தொழிலதிபர்கள் இந்த கிளப்களுக்கு வருவது வழக்கம்.
ஒரு வாரத்திற்கு முன்பு இங்கு வந்து சூதாடி ரூ. 7 லட்சம் பணத்தை இழந்த நடராஜ் என்ற செங்கல் சூளை அதிபர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த கிளப்களில் சூதாட்டம் மூலம் கிடைக்கும் பணத்தை கிளப் அதிபர்கள் அதிக வட்டிக்கு விட்டு வந்ததும், பணம் இல்லாமல் இருக்கும் வாடிக்கையாளர்களின் நகைகளை கட்டாயமாகப் பறித்து அடகு வைத்துப் பணத்தைப்பெறுவதும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு மது சப்ளையையும் இவர்கள் செய்து வந்தனற்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 900 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து இரு கிளப்களின் உரிமையாளர்கள், ஊழியர்கள், சூதாடியவர்கள் என 45 பேர் சிக்கினர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications