இடைத் தேர்தலில் 4 முனைப் போட்டி!

Subscribe to Oneindia Tamil

Vijayakanth
சென்னை: தமிழக சட்டசபை இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இருப்பினும் உண்மையில், திமுக கூட்டணிக்கும், தேமுதிகவுக்குத்தான் நேரடி மோதல் காணப்படுகிறது.

இளையாங்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு ஆகஸ்ட் 18ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்து விட்டது. இதற்கு பாமக, மதிமுக ஆதரவு தெரிவித்துள்ளன.

அதேசமயம், இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை அதிமுக முடிவை நிராகரித்து விட்டு தனித்துப் போட்டியிடுகின்றன.

தற்போது யார் யார் போட்டியிடப் போவது என்பது தெளிவாகி விட்டது. அதன்படி திமுக, காங்கிரஸ் கட்சிகள் ஒரு கூட்டணியாக ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

2வது அணியாக தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது.

3வது அணியாக இடதுசாரிகள் நான்கு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். ஐந்தாவது தொகுதியான இளையாங்குடியில் நட்புக் கட்சி ஒன்றுக்கு ஆதரவு தரப் போவதாக தெரிவித்துள்ளனர். அது யார் என்று தெரிவிக்கப்படவில்லை.

4வது அணியாக பாஜக தனித்து ஐந்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

இவை தவிர கொங்கு முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் உள்ளன. கொங்கு கட்சி தொண்டாமுத்தூரில் மட்டுமே வாக்குகளைப் பிரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யாருடன் யார் மோதல்..

கம்பம் தொகுதியில், திமுக, தேமுதிக, சிபிஎம், பாஜக மோதுகின்றன.

பர்கூர் தொகுதியில், திமுக, தேமுதிக, சிபிஐ, பாஜக மோதுகின்றன.

இளையாங்குடியில் திமுக, தேமுதிக, பாஜக மோதுகின்றன.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் காங்கிரஸ், தேமுதிக, சிபிஐ, பாஜக மோதுகின்றன.

தொண்டாமுத்தூரில் காங்கிரஸ், தேமுதிக, சிபிஎம், பாஜக இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

ஐந்து தொகுதிகளிலும் இப்படி நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுகவைப் போலவே தேமுதிகவும் ஆரம்பத்தில் தேர்தலைப் புறக்கணிக்கலாமா என்ற யோசனையில்தான் இருந்ததாம். ஆனால் கட்சித் தலைவர் விஜயகாந்த்தான் அதெல்லாம் வேண்டாம். மோதிப் பார்த்து விடலாம் என்ற முடிவை எடுத்தாராம்.

யாருக்கு வெற்றி வாய்ப்பு..

தற்போதைய சூழ்நிலையில் இடைத் தேர்தல்களில் திமுக கூட்டணிதான் தொடர்ந்து ஜெயித்து வருகிறது. எனவே வழக்கம்போல இந்தத் தேர்தலிலும் திமுக கூட்டணியே வெல்லும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு, கணிப்பு உள்ளது.

அதேசமயம், அதிமுக என்ற மிகப் பெரிய கட்சி போட்டியிலிருந்து விலகியுள்ளதால் அதிமுக ஓட்டு வங்கியிலிருந்து கணிசமான வாக்குகள் தனக்குக் கிடைக்கலாம் என தேமுதிக நம்புகிறது.

இதன் காரணமாக கடந்த முறை பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் பெறலாம். அதிமுக மறைமுகமாக ஆதரவு கொடுத்தால் சில இடங்களில் வெற்றிக்கும் வாய்ப்புள்ளதாக தேமுதிக தரப்பில் நம்பப்படுகிறது.

அதிமுகவின் புறக்கணிப்பு திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக தேமுதிகவுக்குத்தான் அது கூடுதல் பலம் சேர்க்கும் என்று அரசியல் வட்டாரத்தில் கருதப்படுகிறது.

இதுகுறித்து அரசியல் விமர்சகர் சோ ராமசாமி கூறுகையில், அதிமுகவின் புறக்கணிப்பால் தேமுதிக லாபம் அடையப் போகிறது. இந்த புறக்கணிப்பால், தேமுதிகவின் வாக்கு வங்கி மேலும் பலமடையப் போகிறது.

அதேசமயம், இது நிரந்தரமாக இருக்க வாய்ப்பில்லை. இந்தத் தேர்தலில் அது பலனை சந்திக்கும், அவ்வளவுதான். வழக்கமாக அதிமுக வாக்கு வங்கியைத்தான் தேமுதிக தாக்கி வருகிறது. எனவே இந்தத் தேர்தலில் அதிமுகவின் புறக்கணிப்பால் நிச்சயம் தேமுதிகதான் லாபம் அடையும் என்றார்.

கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு பிறந்த கட்சி தேமுதிக. சந்தித்த முதல் தேர்தலிலேயே 8.33 சதவீத வாக்குகளைப் பெற்று அனைத்து முக்கிய கட்சிகளையும் அதிர வைத்தது.

லோக்சபா தேர்தலில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு 12 சதவீதத்திற்கும் மேலான வாக்குகளைப் பெற்றனர் தேமுதிக வேட்பாளர்கள்.

இந் நிலையில், இந்த இடைத் தேர்தலிலும் தேமுதிக சிறப்பான வாக்கு சதவீதத்தைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+