கூட்டணி தர்மத்தை காப்பாற்றிய திமுக-தங்கபாலு
சென்னை: காங்கிரஸ் போட்டியிட்ட ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளை மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கியதின் மூலம் கூட்டணி தர்மத்தை காப்பாற்றியுள்ளார் முதல்வர் கருணாநிதி என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
இடைத்தேர்தலில் ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய 2 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது.
சோனியாகாந்தி ஒப்புதலுடன் வேட்பாளர்கள் இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படுவார்கள். வேட்பாளர்கள் டெல்லியில் அறிவிக்கப்படலாம் அல்லது தமிழக காங்கிரஸ்கூட அறிவிக்கலாம்.
மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி நடத்துகிறோம். மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றுகிறோம். ஆகவே மக்கள் எங்களுக்கு நல்லாரவு கொடுப்பார்கள்.
ஸ்ரீவைகுண்டம், தொண்டாமுத்தூர் ஆகிய 2 தொகுதிகளும் காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகள் ஆகும். முதல்வர் கருணாநிதி ஜனநாயக முறைப்படி கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளை ஒதுக்கி கூட்டணி தர்மத்தை காப்பாற்றியுள்ளார்.
தொண்டாமுத்தூரில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு சீட்டு கிடைக்குமா? என்பதை இப்போது சொல்ல முடியாது. வேட்பாளர் யார் என்பதை சோனியாகாந்தி முடிவு செய்வார் என்றார்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications