கதவடைப்பு: அறிவிக்கத் தயாராகும் ஹூண்டாய்!
Subscribe to Oneindia Tamil

ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த சில தினங்களாக ஊதிய திருத்தம் கோரியும், நீக்கப்பட்ட சில தொழிலாளர்களை மீண்டும் சேர்க்கக் கோரியும் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறது.
பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க, பலவித முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், சிக்கல் தீராததால், கதவடைப்பை அறிவிக்க ஹூண்டாய் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நிலைமையை தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். தொழிலாளர்கள் ஒத்துழைக்காவிட்டால், விரைவில் கதவடைப்பை அறிவிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என்றார்.












Click it and Unblock the Notifications