மதுரையில் திமுகவினர் கோஷ்டி மோதல்-அலுவலகம், கார் மீது தாக்குதல்
மதுரை: மதுரையில் திமுகவினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 25வது வார்டு மாநகராட்சி உறுப்பினரின் அலுவலகம், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
மதுரை ஆரப்பாளையம் 26-வது வார்டு திமுக கிளை செயலாளராக இருப்பவர் சீனி ரமேஷ். இவருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பிச்சைக்கிளி, துரை ஆகியோருக்கும் இடையே
முன்விரோதம் இருந்துள்ளது.
25-வது வார்டு மாமன்ற திமுக உறுப்பினர் அருண்குமார் இரு தரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, அவர் ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந் நிலையில் நள்ளிரவில் சீனி ரமேஷ் ஆதரவாளர்களான ராஜ்கமல்,ராஜசேகரன், காசிவிஸ்வநாதன், பாண்டி, பாரி, மணி ஆகியோர் அருண்குமார் அலுவலகத்திற்குச் சென்று திடீர் தாக்குதல் நடத்தி அவரது அலுவலகத்தை
அடித்து நொறுக்கினர்.
இதில் அவரது வாகனமும் உடைக்கப்பட்டது. அங்கிருந்த ஆட்டோவும், இரு சக்கர வாகனமும் உடைக்கப்பட்டன.
இது குறித்து அருண்குமாரின் வாகன ஓட்டுனர் பிச்சைப்பாண்டி கரிமேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சீனி ரமேஷ் ஆதரவாளர்கள் மீது போலீசார் தீண்டாமைப் பிரிவு
உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து, ராஜ்கமல், ராஜ சேகரன், காசிவிஸ்வநாதன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications