ராணுவ வாகன தாக்குதல்-பெரியார் தி.க. பொது செயலாளர் விடுதலை
சென்னை: கோவையில் ராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக தேச பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட பெரியார் தி.க. மாநில பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணனை விடுதலை செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கடந்த மே 2ம் தேதி கோவையில் பெரியார் தி.க. போராட்டம் நடத்தியது. அப்போது அந்த வழியாகச் சென்ற இந்திய ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இது தொடர்பாக பெரியார் தி.க. மாநில பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் உள்பட 46 பேர் மீது கோவை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர்.
இதில் ராமகிருஷ்ணனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் போலீசார் அடைத்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து ராமகிருஷ்ணன் மனைவி வசந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில், ஹேபியஸ் கார்பஸ் (ஆட் கொணர்வு) மனுதாக்கல் செய்தார்.
அதில் எனது கணவரை சட்ட விரோத காவலில் அடைத்து வைத்துள்ளனர். அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று காலை நீதிபதி முகோபாத்யாயா, நீதிபதி ராஜ இளங்கோ ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், கோவை போலீஸ் கமிஷனர் தனது மனதை சரியாக செலுத்தி தேசிய பாதுகாப்பு சட்டத்தை பிறப்பிக்கவில்லை. எனவே ராமகிருஷ்ணன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்படுகிறது என்று தீர்ப்பளித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications