கருப்பு-சிவப்பில் எஸ்.வி.சேகர்-திமுகவினர் பிரமாத வரவேற்பு!!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: குற்றாலம் சாரல் விழாவுக்காக நெல்லை வந்த அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.வி.சேகர், திமுகவின் நிறமான கருப்பு பேன்ட், சிவப்பு சட்டையுடன் அசத்தலாக வந்திறங்கினார். அவருக்கு திமுகவினர் பிரமாதமாக வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர்.

குற்றாலம் சாரல் விழாவில் நாடகம் போடுகிறார் எஸ்.வி.சேகர். இதற்காக அவர் நெல்லைக்கு ரயில் மூலம் வந்தார்.

மயிலாப்பூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான சேகர், திமுகவின் நிறமான கருப்பு பேன்ட், சிவப்பு சட்டையுடன் கலக்கலாக வந்திறங்கினார்.

அவரை ரயில் நிலையத்தில் ஏராளமான திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர்.

கைகளில் திமுக கொடிகளை ஏந்தி வந்த அவர்கள் அதிமுக எம்.எல்.ஏவான சேகரை வரவேற்று அழைத்துச் சென்ற காட்சியை ரயில் நிலையத்திற்கு வந்திருந்தவர்கள் வியப்புடன் பார்த்தபடி சென்றனர்.

திமுகவினர் கொடுத்த வரவேற்பை புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்ட எஸ்.வி.சேகர் பின்னர் அங்கிருந்து விடுதிக்குக் கிளம்பிச் சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+