நகை பறித்த பெண் கவுன்சிலரின் மகன் கைது
சென்னை: பெண்ணிடம் சங்கிலி பறித்த சென்னை மாநகரட்சி பெண் கவுன்சிலரின் மகன் கைது செய்யப்பட்டான்.
சென்னை மையிலாப்பூர் கேசவ பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த அரசு ஊழியரான ரேணுகா (42) நேற்றிரவு 7.30 மணியளவில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கேசவ பெருமாள் கோவில் தெருவில் நடந்து சென்றுபோது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ரேணுகாவின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
இது குறித்து ரேணுகா மைலாப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து பழைய குற்றவாளிகளின் படங்களைக் காட்டினர்.
அதில் வாலிபரின் போட்டோவை பார்த்து தன்னிடம் செயின் பறித்தவனை அடையாளம் காட்டினார் ரேணுகா.
அந்த வாலிபர் மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் ஒருவரின் மகன் ஆவார். இதையடுத்து அவரைப் பிடித்த போலீசார் ரேணுகாவின் 8 பவுன் செயினை பறிமுதல் செய்தனர்.
அண்ணாநகரில் கிரில் கொள்ளை..
சென்னை அண்ணா நகர் சி பிளாக் முதலாவது அவென்யூவில் மனைவி, மகனுடன் வசித்து வருபவர் கோபால்.
நேற்றிரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது குளியலறையின் ஜன்னல் கம்பியை கழற்றி கிரில் கொள்ளையன் உள்ளே புகுந்தான்.
அலமாரியில் இருந்த கைப்பை எடுத்துக் கொண்டு கிளம்பினான். அதில் வைர நெக்லஸ், 2 தங்க கம்மல்கள், வைர மூக்குத்தி ஆகியவை இருந்தன. பையில் திருடன் கையை விட்டு துழாவியபோது அதில் இருந்த சென்ட் பாட்டில்கள் கீழே விழுந்து உடைந்து சிதறின.
சத்தம் கேட்டு கோபாலின் மகன் எழவே, கொள்ளையன் கைப் பையுடன் தப்பியோடினான். பையில் இருந்த கம்மல்கள், மூக்குத்தியை எடு்த்துக் கொண்டு அதை வீட்டிற்கு பின்புறம் உள்ள சாலையில் வீசிவிட்டு ஓடினான்.
இதுகுறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அண்ணாநகர் போலீசார் வந்து வீட்டிற்கு வெளியே கிடந்த கைப்பையை மீட்டனர்.
அதற்குள் கர்ச்சீப்பில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ் மற்றும் தங்க நகைகள் அப்படியே இருந்தன. அதை கர்ச்சீப் என நினைத்து கொள்ளையன் போட்டுவிட்டதாகத் தெரிகிறது.
ஹெல்மட் கொள்ளையர்கள் அட்டகாசம்..
சென்னை பெரம்பூர் திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் லதா (25). இவர் அங்குள்ள மார்க்கெட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மட் அணிந்திருந்த கொள்ளையர்கள் இருவர் அவரை கீழே தள்ளி தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications