சென்னை-விமான பயணிகள் எண்ணிக்கை பெரும் சரிவு!
சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறதாம்.
சென்னை விமான நிலையத்தில் பெரும் பொருட் செலவில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன. பல்வேறு நவீன வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இந்த நிலையில் விமான நிலையத்தில் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறதாம்.
ஏப்ரல் - ஜூன் மாதங்களில் உள்ளூர் பயணிகளின் எண்ணிக்கை 12 சதவீதம் குறைந்துள்ளதாம். ஒட்டுமொத்தமாக கடந்த 3 மாதங்களில் விமான நிலையத்தைப் பயன்படுத்தியோரின் எண்ணிக்கை 9 சதவீத அளவுக்கு குறைந்துள்ளது.
அதேபோல விமானங்களின் இயக்கமும் 4 சதவீதம் குறைந்துள்ளதாம். அதேசமயம், உள்ளூர் சரக்குப் போக்குவரத்து 71 சதவீத உயர்வைக் கண்டுள்ளது.
சர்வதேச பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரையில், ஏப்ரல்- ஜூன் மாதங்களில் 2 சதவீதம் குறைந்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 68 ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்த்தில் 9,26,894 பேராக இருந்தது.
2008 ஆண்டு இறுதி முதலே சர்வதேச பயணிகள் போக்குவரத்து குறையத் தொடங்கி விட்டதாம்.
இந்த குறைவுக்குப் பொதுவான காரணம் பொருளாதார மந்தநிலை. இன்னொன்று ஏறி விட்ட விமானக் கட்டணங்கள். இதுவே உள்ளூர் பயணிகள் போக்குவரத்து பெருமளவு குறைய முக்கிய காரணம்.
இதன் காரணமாக பல்வேறு விமான நிறுவனங்களும், பல்வேறு சலுகைகளை அறிவித்து பயணிகளை இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. ஆடி மாத தள்ளுபடி என்று அறிவிக்காதது மட்டும்தான் பாக்கி.












Click it and Unblock the Notifications