குடிநீர் இணைப்பு முறைகேடு: 4 என்ஜீனியர்கள் சஸ்பெண்ட் - ஊழியர்கள் போராட்டம்
நெல்லை: நெல்லை மாநகராட்சியில் குடிநீர் இணைப்பில் முறைகேடு செய்ததாக 4 பொறியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி மேயர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையைக் கண்டித்து மாநகராட்சி அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாநகராட்சி 17வது வார்டில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்பு முறைகேடாக வழங்கப்பட்டுள்ளதாகவும், அதில் பல கோடி ஊழல் நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
நேற்று நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் இது பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக குற்றம் சாட்டிய அதிமுக கவுன்சிலர் சுதா பரமசிவன் மீது திமுக கவுன்சிலர் வடையை தூக்கி வீசியதால் பெரும் ரகளையானது.
இந்த நிலையில் மாநகராட்சி பொறியாளர்கள் சாமுவேல் செல்வராஜ், பைஜூ, எஸ் கருப்பசாமி, பிரதீப் ஆகிய 4 பேரையும் மாநகராட்சி ஆணையர் தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக மேயர் எ.ஏல் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அலுவலர்கள் எதிர்ப்பு..
இந்த நடவடிக்கைக்கு மாநகராட்சி அலுவலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இன்று முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளனர்.
மேலும், திமுக கவுன்சிலர் ரேவதி, முன்னாள் திமுக கவுன்சிலர் உமா மகேஸ்வரி, செயற்பொறியாளர் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications