திமுகவில் இணைந்தார் அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இன்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் இணைந்தார்.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். 2 நாட்களுக்கு முன்பு அவரை அப்பொறுப்பிலிருந்து தூக்கினார் ஜெயலலிதா. நேற்று திடீரென கட்சியை விட்டும் அனிதாவை நீக்கினார் ஜெயலலிதா.
இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதா அவசர கோலத்தில் எடுத்த முடிவு இது என்று கூறியிருந்தார் அனிதா. அவர் திமுகவில் சேர முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று சென்னை வந்த அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வர் கருணாநிதியை மாலையில் அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து அவர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அனிதா.
ஜெ.வின் அவசர கோல முடிவு...
முன்னதாக திருச்செந்தூர் அருகே உள்ள தனது சொந்த ஊரான தண்டுபத்து கிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ஜெயலலிதா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து என்னை நீக்கி இருப்பது அவசர கோலத்தில் எடுத்து முடிவாகவே நான் கருதுகிறேன். இந்த முடிவு நான் எதிர்பார்க்காத நடவடிக்கையாகும். அ.தி.மு.க. கட்சியில் அடிக்கடி தவறான முடிவுகள் எடுப்பது வழக்கமாகிவிட்டது.
சில முக்கிய பிரமுகர்களின் நெருக்கடியாலும், தொல்லைகளாலும் நேற்று முன்தினம் நான் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.
இதுவரை எம்.ஜி.ஆர். கண்ட இயக்கத்திற்கோ, அல்லது எனக்கு ஓட்டுபோட்ட மக்களுக்கோ, நான் எந்த துரோகமும் செய்யாமல், தொய்வில்லாமல் மக்கள் பணி செய்து வந்தேன்.
எனக்கு வாக்களித்த மக்களுக்கு நான் என்றும் நன்றி உள்ளவனாக இருந்து தொகுதி மக்களுக்கு என் கடமையை தொடர்ந்து செய்வேன் திருச்செந்தூர் தொகுதி மட்டும் அல்ல, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. தொண்டர்களிடம் கேட்டால் என் செயல்பாடுகள் குறித்து சொல்வார்கள்.
எனக்கு ஓட்டுபோட்ட எனது தொகுதி மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து அதன்பின்னர் எனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்பேன்.
இந்த முடிவு அவசர கோலத்தில் எடுத்த முடிவு. இந்த முடிவை எடுத்தவர்களே பின்னால் வருத்தப்படுவார்கள் என்றார் அவர்.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications