5 விமானங்களுக்கான ஆர்டரை ரத்து செய்த ஏர் இந்தியா!
டெல்லி: பெரும் நஷ்டம் காரணமாக, போயிங் நிறுவனத்திடம் வாங்கத் திட்டமிட்டிருந்து 5 விமானங்களுக்கான ஆர்டரை ரத்து செய்துவிட்டது ஏர் இந்தியா நிறுவனம்.
மேலும் குறித்த நேரத்தில் தங்களுக்கு 27 பி 787 விமானங்களை சப்ளை செய்யாத போயிங் நிறுவனத்திடம் 710 மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாகக் கேட்டுள்ளதாம் ஏர் இந்தியா.
விமானங்களுக்கான ஆர்டர் ரத்து குறித்து ஏற்கெனவே உரிய கடிதங்களை போயிங் நிறுவனத்துக்கு அனுப்பிவிட்டதாக ஏர் இந்தியா தலைவர் அர்விந்த் ஜாதவ் கூறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
போயிங் நிறுவனத்திடமிருந்து 8 பில்லியன் டாலர் செலவில் 68 போயிங் விமானங்களை வாங்கத் திட்டமிட்டது ஏர் இந்தியா. இவற்றில் 23 விமானங்கள் 777 ரகத்தைச் சேர்ந்தவை. 27 விமானங்கள் 787-8 ட்ரீம் லைனர்ஸ் ரகம். மீதி 18 விமானங்கள் 737-800 ரகத்தைச் சேர்ந்தவை.
ஒவ்வொரு விமானமும் 165 மி்ல்லியன் முதல் 200 மில்லியன் வரை விலை கொண்டவை. ஏர் இந்தியாவுக்கு சற்று சலைகை விலையில் இந்த விமானங்களை சப்ளை செய்ய ஒப்புக் கொண்டது போயிங்.
இடையில் பெரும் நஷ்டத்துக்கு ஏர் இந்தியா தள்ளப்பட்டதால், பல வழித்தடங்களை ரத்து செய்துள்ளது. எனவே அதற்கேற்ப தனது ஆர்டரில் சில விமானங்களைக் குறைத்துக் கொண்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications