ஸ்டேட் பாங்க்கின் நிகர லாபம் 42% உயர்வு
Subscribe to Oneindia Tamil
மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஸ்டேட் வங்கியின் நிகர லாபம் 42 சதவீத உயர்வைக் கண்டு, ரூ. 2,330.37 கோடியாக இருந்தது.
இது கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,640.79 கோடியாக இருந்தது.
இந்தியா முழுவதும் 12,000 கிளைகளைக் கொண்டுள்ள ஸ்டேட் வங்கி, நாட்டின் ஒட்டுமொத்த கடன்கள் மற்றும் முதலீடுகளில் 25 சதவீதத்தை கையில் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications