விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகி 2 பைலட்டுகள் பலி
Subscribe to Oneindia Tamil
மேடக்: ஆந்திர மாநிலம் மேடக் நகரில் விமானப்படை விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அதில் இருந்த இரு பைலட்டுகளும் பலியாகி விட்டனர்.
எச்பிடி-32 ரக பயிற்சி விமானமான அதில், இரண்டு விமானப்படை விமானிகள் இருந்தனர். இன்று காலை, அந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது மேடக் அருகே அந்த விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்தது.
அதில், விமானப்படை அகாடமியைச் சேர்ந்த நிதீன் ஜெயின், சதுர்வேதி ஆகிய இரு பைலட்டுகளும் உயிரிழந்தனர்.
விமானம் விழுந்த இடம் தரிசு நிலமாகும். எனவே தரையில் யாரும் இல்லை.












Click it and Unblock the Notifications