சென்னையில் நானோ கார் விற்பனை தொடங்கியது

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், உலகிலேயே மிகவும் குறைந்த விலையில் ரூ. 1 லட்சத்தில் விற்பனை செய்யும் வகையில் கார்களைத் தயாரித்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே விற்பனைக்கு வந்திருக்க வேண்டிய நானோ, பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் தயாராகி மும்பையில் மக்கள் பார்வைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் சென்னையிலும் நானோ அறிமுகப்படுத்தப்பட்டது. கிண்டியில் உள்ள டாடாவின் கான்கார்ட் மோட்டார்ஸ் மற்றும் அண்ணா நகரில் உள்ள வி.எஸ்.டி. மோட்டார்ஸில் முன்பதிவு செய்யப்பட்டது.
முதல் நானோ கார் மும்பையைச் சேர்ந்த வாடிக்கையாளருக்கு கடந்த வாரம் வழங்கப்பட்டது.
சென்னையில், முதன்முறையாக நேற்று நானோ கார் ஓடத்தொடங்கியது. முதல் கார் வழங்கும் நிகழ்ச்சி கிண்டியில் உள்ள கான்கார்ட் மோட்டார்சில் நடைபெற்றது.
சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, முதல் காருக்கான சாவியை அதன் உரிமையாளர் வடிவாம்பாள் கந்தசாமியிடமும், 2-வது காருக்கான சாவியை அதன் உரிமையாளர் ஆர்.விஜயகுமாரிடமும் வழங்கினார்.
முதல் காரைப் பெற்ற வாடிக்கையாளர் வடிவாம்பாள் கந்தசாமியின் மகள் காயத்ரி, இந்தக் கார் குலுக்கலில் தனக்குக் கிடைத்திருப்பது மிகப்பெரிய அதிர்ஷ்டம் என சந்தோஷத்துடன் கூறினார்.
2-வது காரை பெற்ற விஜயகுமார், "கடைசி நாளில், இறுதி நேரத்தில் தான் விண்ணப்பித்தேன். பாரத ஸ்டேட் வங்கியில் லோனுக்கும் விண்ணப்பித்து இருந்தேன். கடைசி நேரத்தில் முன்பதிவு செய்த எனக்கு, முதலாவதாக கார் கிடைத்திருப்பது மகிழ்ச்சி" என்றார்.
அடுத்த ஓராண்டுக்குள் மேலும் 7500 கார்கள் சென்னை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுவிடும் என்றார் டாடா நிறுவன அதிகாரி.
என்ன விலை?
டாடா நானோ காரின் சென்னை விலை விபரம்:
நானோ ஸ்டாண்டர்டு ரூ.1,46,000, நானோ சி.எக்ஸ். ரூ.1,70,000 விலை, நானோ எல்.எக்ஸ். ரூ.2,06,000.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications