கணவரின் பிணத்துடன் பூட்டிய வீட்டுக்குள் 5 நாள் இருந்த பெண் மீட்பு
செங்கல்பட்டு: கணவரி்ன் அழுகிப் போன இறந்த உடலுடன் 5 நாட்களாக பூட்டிய வீட்டுக்குள் இருந்த பெண்ணை போலீஸார் மீட்டுள்ளனர். உடலும் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் வசித்து வந்தவர் ஜெயக்குமார் (53). சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் என்ஜினீயரிங் பிரிவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு குழந்தை இல்லை.
ரேணுகா மனநலம் பாதிக்கப்பட்டவர். ரேணுகா அக்கம் பக்கத்தினருடன் பேசுவது கிடையாது. இதனால் இவர்களது வீட்டில் என்ன நடந்தாலும் அக்கம் பக்கத்தினருக்குத் தெரியாது.
இந்த நிலையில் ஜெயக்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
செங்கல்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் ஆல்பிரட் வில்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். போலீசை கண்டதும் அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்காமல் ரேணுகா விரட்டினார். பின்னர் அவர்களை உள்ளே அழைத்தார். காபி கொடுத்தார்.
வீட்டுக்குள் நுழைந்ததும் துர்நாற்றம் அதிகம் இருந்தது. இதையடுத்து போலீஸார் உள்ளே போய் பார்த்தனர். அப்போது ஜெயக்குமாரின் உடல் துணியால் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தனர். உடல் மிகவும் அழுகிப் போய் காணப்பட்டது.
ஜெயக்குமார் இறந்து சுமார் 5 நாட்கள் இருக்கலாம் என தெரிகிறது. இதுகுறித்து ரேணுகாவிடம் போலீஸார் கேட்டனர். ஆனால் அவர் சரியான பதிலைத் தரவில்லை. மாறாக, என் கணவரை காப்பாற்ற எனக்கு தெரியும். நீங்கள் வெளியே போங்கள் என்று கூறினார்.
பிறகு தனது கழுத்தில் அணிந்திருந்த தாலியை கழற்றி பூஜை அறையில் மாட்டி விட்டு குளியல் அறைக்குப் போனார்.
இதையடுத்து அவரை சமாதானம் செய்த போலீஸார் ஆம்புன்ஸை வரவழைத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஜெயக்குமாரின் பிரேதத்தை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications