இடைத் தேர்தல் - 4ம் தேதி முதல் ஸ்டாலின் பிரசாரம்
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலை ஆகஸ்ட் 4ம் தேதி ஸ்ரீவைகுண்டத்திலிருந்து தொடங்குகிறார் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின்.
திமுக கூட்டணி சார்பில் திமுக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் சட்டசபை இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
தொண்டாமுத்தூர், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. கம்பம், இளையாங்குடி, பர்கூர் தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.
நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு விட்டது. இதையடுத்து தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இத்தேர்தலில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இருந்தாலும் ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கும், தேமுதிகவுக்கும்தான் நேரடிப் போட்டி காணப்படுகிறது.
அதிமுக இந்தத் தேர்தலைப் புறக்கணித்து விட்டதால் தேர்தல் களம் விறுவிறுப்பின்றி காணப்படுகிறது.
இந்த நிலையில் திமுக கூட்டணியின் பிரசாரத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் 4ம் தேதி தொடங்குகிறார்.
4-ந் தேதி ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கும் ஸ்டாலின், காங்கிரஸ் வேட்பாளர் சுடலையாண்டியை ஆதரித்து மாலை 5 மணிக்கு பழைய காயலில் பேசுகிறார்.
அங்கிருந்து முக்காணி, உமரிக்காடு, வாழவல்லான், ஏரல், சிறுதொண்டநல்லூர், சாயர்புரம் பேரூராட்சி, பெருங்குளம் பேரூராட்சி, சிவகளை, பேட்மாநகரம், பேரூர், திருப்புளியங்குடி, ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் ஆதரவு திரட்டுகிறார்.
5-ந் தேதி மாலை 5 மணிக்கு திரவியபுரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கிருந்து புதுக்கோட்டை, கூட்டாம்புளி, சிவஞானபுரம், தங்கம்மாள்புரம், சேர்வைக்காரன் மடம், ஜக்கம்மாள்புரம், செந்தியம்பலம், கட்டாலங்குளம், முடிவைத் தானேந்தல், வாகைகுளம், வர்த்தக ரெட்டி பட்டி, திம்ம ராஜபுரம், பேரூரணி, கே.பி. தளவாய்புரம்.
செக்காரக்குடி, பொட்டலூரணி, தெய்வ செயல்புரம், காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, உழக்குடி, கலியாவூர், வல்லநாடு, மணக்கரை, ஆறாம் பண்ணை, கொங்கராய குறிச்சி, ஆழ்வார்கற்குளம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
கம்பத்தில்...
6-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கம்பம் தொகுதிக்குட்பட்ட கோகிலாபுரத்தில் பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கிருந்து ஏ.எம்.பட்டி, ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, கே.கே.பட்டி, என்.டி.பட்டி, சுருளிப்பட்டி, கே.எம்.பட்டி வழியாக இரவு கே.ஜி.பட்டியில் பிரசாரத்தை முடிக்கிறார்.
மறு நாள் 7-ந் தேதி மாலை 4.30 மணிக்கு லோயர் கேம்பில் பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கிருந்து கூடலூர், கம்பம், க.புதுப்பட்டி, கே.சி.கே. பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம் வழியாக இரவில் கோம்பையில் பிரசாரத்தை முடிக்கிறார்.
8,9 ஆகிய தேதிகளில் இளையான்குடியிலும் 12,13 ஆகிய தேதிகளில் தொண்டாமுத்தூரிலும், 14 மற்றும் 16-ம் தேதிகளில் பர்கூர் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார் ஸ்டாலின்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications