மலேசியாவில் 438 பேர் மீது ஐ.எஸ்.ஏ.வில் கைது
கோலாலம்பூர்: மலேசியாவின் அடக்குமுறைச் சட்டமான உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தை நீக்க வேண்டும் என்று கோரி நேற்று அந்த நாட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய மிகப் பெரிய பேரணியில், பெரும் வன்முறை மூண்டது. 438 பேர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மலேசிய அரசின் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம், இந்தியாவில் இருந்த பொடா சட்டத்தை விட மோசமானது. இந்த சட்டத்தை நீக்க வேண்டும் என்று அங்கு நீண்ட காலமாக கோரி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கோலாலம்பூரில் இந்திய வம்சவாளியினர் நடத்திய போராட்டத்தின்போது ஹின்ட்ராப் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளை இந்த சட்டத்தைக் கொண்டுதான் மலேசிய அரசு சிறையில் போட்டு வைத்து ஒரு வருடங்களுக்கு பின்னர் சமீபத்தில் விடுதலை செய்தது.
இந்த நிலையில், இந்த சட்டத்தை ஒழிக்கக் கோரி அந்த நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் கோலாலம்பூரில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.
ஆனால் போலீஸார் இந்தப் பேரணியை வன்முறை மூலம் அடக்கியதால் பெரும் அமளி ஏற்பட்டது. மலேசிய வரலாற்றில் போலீஸார் இது போல நடந்து கொண்டதில்லை என்று கூறும் அளவுக்கு தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், போராட்டத்தை போலீஸார் அடக்கினர்.
பல்வேறு தெருக்கள் வழியாக சிறு சிறு குழுக்களாக வந்த மக்கள், திடீரென மொத்தமாக திரண்டு பேரணியாக கிளம்பினர். இதை எதிர்பார்க்காத போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர். சிதறி ஓடிய மக்கள் சிறு சிறு தெருக்கள் வழியாக ஓடி பின்னர் மீண்டும் கூடி பேரணியைத் தொடர்ந்ததால் கோலாலம்பூரே பெரும் அமளியாகி விட்டது.
நகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
438 பேர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது..
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 438 பேரை மலேசிய போலீஸார், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
இவர்களில் 38 பேர் 18 வயதுக்கும் கீழானவர்கள். 37 பேர் பெண்கள் ஆவர்.
கைதானவர்களில் அன்வர் இப்ராகிமின் கட்சியான பி.கே.ஆர். கட்சியின் துணைத் தலைவரான சிவராசாவும் ஒருவர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications