சுஸ்லான் ரூ.453 கோடி நஷ்டம்!
Subscribe to Oneindia Tamil

இதே நிறுவனம் கடந்த ஆண்டு ரூ.9.3 கோடி நிகர லாபம் சந்பாதித்தது.
விற்பனையில் ஏற்பட்ட அசாதாரண வீழ்ச்சி காரணமாகவே தங்களுக்கு இந்த பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதனைச் சரிகட்டும் விதத்தில் செயல்திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் சுஸ்லான் சிஇஓ சுமந்த் சின்ஹா கூறியுள்ளார். சர்வதேச அளவில் தங்கள் வாடிக்கையாளர்கள் கொள்முதலை அடுத்த காலாண்டுக்கு ஒத்தி வைத்துவிட்டதும் இதற்குக் காரணம் என்றார் சுமந்த்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 2400 முதல் 2600 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் விற்பனையாகும் வாய்ப்புள்ளதாகவும் இது தங்கள் நஷ்டத்தைக் குறைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுஸ்லான் மொத்த வருவாய் இந்த ஆண்டு ரூ.4171 கோடியாக இருந்தது. இதுவே கடந்த ஆண்டு ரூ.3127 கோடியாக இருந்தது.












Click it and Unblock the Notifications