மைசூர் கிருஷ்ணராஜ சாகர் அணையை குண்டு வைத்துத் தகர்க்க சதி?
மைசூர்: மைசூர் அருகே உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையை வெடிகுண்டுகள் வைத்துத் தகர்க்க சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அணைக்கு அருகே ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல்வேறு வகையில் தீவிரவாத செயல்களை தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. நாட்டின் முக்கிய அணைகளை குண்டு வைத்துத் தகர்ப்பது என்பது அதில் ஒன்றாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள முக்கிய அணையான கிருஷ்ணராஜ சாகர் அணையை குண்டு வைக்க சதி நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணராஜசாகர் அணை தற்போது நிரம்பி வழிகிறது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அணை பகுதி முழுவதும் ரோந்து சுற்றி வந்தனர்.
அப்போது ஒரு இடத்தில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் வெடிகுண்டுகளான ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் ஆகியவை மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
அணையை தகர்க்கும் நோக்கத்துடன் தீவிரவாதிகள் இவற்றை இங்கு பதுக்கி வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications