ஆடி்பெருக்கு விழா - காவிரிக் கரையில் மக்கள் உற்சாக வழிபாடு
திருச்சி: ஆடிப்பெருக்கு விழா இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. காவிரிக் கரையில் லட்சக்கணக்கான மக்கள் இன்று பக்திப் பெருக்குடன் ஆடிப்பெருக்கைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்று ஆடி மாதம் 18ம் நாள் ஆகும். இது ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. குழந்தைப் பேறு, நீடித்த ஆயுள், திருமணப்பேறு, புதுமணமக்கள் வாழ்வில் சுபிட்சம் கூடி வர ஆடிப்பெருக்கு தினத்தன்று மக்கள் வழிபாடு செய்கின்றனர்.
இந்த ஆடிப் பெருக்கு தினத்தன்று காவிரி உள்ளிட்ட ஆறுகளுக்குச் சென்று கங்கை தேவியை மனதில் வரித்து வணங்குவது வழக்கம்.
இதையொட்டி இன்று ஒகேனக்கல், மேட்டூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரிகிருஷ்ணகிரி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பஸ், கார்கள், வேன்களில் வந்து குவிந்தனர்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்து விட்டு காவிரி அன்னையை வழிபட்டனர். ஏராளமான பேர் ஒகேனக்கல் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
இதேபோல், மேட்டூர் காவிரியில் புனித நீராடி அணைக்கட்டு முனியப்ப சாமியை தரிசனம் செய்தனர். ஆடு, கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
சேலம், தர்மபுரி, ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து இன்று சிறப்பு பஸ்கள் விடப்பட்டு இருந்தது.
ஸ்ரீரங்கத்தில்...
திருச்சியிலும் ஆடிப் பெருக்கு வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
குறிப்பாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபப் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடி ஆடிப் பெருக்கைக் கொண்டாடினர்.
தஞ்சை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் காவிரி ஆற்றங்கரைகளில் ஆடிப்பெருக்கு விழா இன்று கொண்டாடப்பட்டது.
புதுமணதம்பதிகள் தாலிகயிறு மாற்றி வழிபாடு நடத்தினார்கள். பவானி-கொடுமுடியில் ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பக்தர்கள் காவிரி ஆற்றில் குளித்து வழிபட்டனர்.
காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடுவதால் இந்த ஆண்டு மக்கள் மிகுந்த மன நிறைவுடன் ஆடிப்பெருக்கை கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications