சேலம் அருகே விசைத்தறி கூடத்தில் தீ விபத்து - 20 லட்சம் பொருட்கள் சேதம் !
சேலம்: சேலம் அருகே விசைத்தறி கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 20 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.
சேலம் கொண்டலாம்பட்டி ரங்காபுரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருக்கு சொந்தமாக விசைத்தறி கூடம் உள்ளது. இந்த விசைத்தறி கூடத்தில் மேல் பகுதியில் சிமென்ட் கூரை உள்ளது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க, விசைத்தறி கூடத்துக்குள் தென்னை ஓலைகள் போடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், அந்த தென்னை ஓலையில் திடீரென தீப்பிடித்தது. இது மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. விசைத்தறி கூடம் தீப்பற்றி எரிந்ததை பார்த்த தேவராஜ் அதிர்ச்சி அடைந்தார். உடனே அருகில் உள்ள தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர்.
தீ விபத்தில் விசைத்தறி கூடத்தில் விசைத்தறி இயந்திரங்களில் ஒரு பகுதி முற்றிலும் எரிந்து விட்டது.
அங்கு இருந்து நூல் மற்றும் ஜவுளி துணிகள், பீரோ உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. இதன் மதிப்பு ரூ 20 லட்சம் என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications