புதுச்சேரி தேமுதிக செயலாளர் அசனாவுடன் ரங்கசாமி திடீர் சந்தி்ப்பு - தேமுதிகவில் சேர திட்டம்?

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டவர் அசனா. அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி போட்டியிட்டார்.
இந்தத் தேர்தலில் ரங்கசாமி சுத்தமாக வேலை செய்யவில்லை. இருப்பினும் நாராயணசாமி வெற்றி பெற்று விட்டார். சமீபத்தில் ரங்கசாமி உள்ளிட்ட அவரது ஆதரவார்களுக்கு காங்கிரஸ் மேலிடம் சூடு வைத்தது.
தற்போது ரங்கசாமி காங்கிரஸ் கட்சியில் முற்றிலும் ஒதுக்கி, ஓரம் கட்டப்பட்ட நிலையில் உள்ளார்.
இந்த நிலையில் காரைக்கால் மற்றும் நாகூரில் நடந்த திருமண நிகழ்ச்சிகளில் நேற்று ரங்கசாமி கலந்து கொண்டார்.
காரைக்காலுக்கு வந்த அவர் அசனா வீட்டுக்குச் சென்று அவரை சந்தித்து தனியாகப் பேசினார். பின்னர் அவர் புதுவை கிளம்பிச் சென்றார்.
இந்த திடீர் சந்திப்பு புதுவை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அசனாவின் மகளுக்கு சமீபத்தில் கல்யாணம் நடந்தது. அதில் கலந்து கொள்ள முடியாமல் போனதால் தற்போது வந்து அவரை சந்தித்து ரங்கசாமி பேசியதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கும் மேலாக இந்த சந்திப்பில் முக்கியத்துவம் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. தேமுதிகவில் சேர ரங்கசாமி முயல்வதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
ரங்கசாமி தேமுதிகவில் இணைந்தால் அது தேமுதிகவுக்கு பெரும் பலத்தைக் கொடுக்கும் என்பதால் இந்த சந்திப்பு புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications