காங். சார்பில் சோம்நாத் ராஜ்யசபா தேர்தலில் போட்டி?

லோக்சபா சபாநாயகராக சோம்நாத் பதவியில் இருந்த காலம் அவரால் என்றென்றும் மறக்க முடியாதது.
பிரதமர் மன்மோகன் சிங் கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சோம்நாத் சபாநாயகர் பதவியில் இருக்கக் கூடாது என்று சிபிஎம் மேலிடம் உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்க அவர் மறுத்து விட்டார். இதையடுத்து கட்சியை விட்டு அவரை நீக்கியது சிபிஎம் பொலிட்பீரோ.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த நாளின்போது பாஜக உறுப்பினர்கள் கோடிக்கணக்கான பணத்தை சபையில் கொட்டி, சமாஜ்வாடிக் கட்சியினர் மாற்றி வாக்களிக்க பணம் கொடுத்ததாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தனது பதவிக்காலத்தை முடித்த சோம்நாத் லோக்சபா தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி விட்டார்.
இந்தநிலையில் தற்போது சோம்நாத்தை மீண்டும் லைம் லைட்டுக்குக் கொண்டு வர காங்கிரஸ் முயல்வதாகத் தெரிகிறது. அவரை ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வைக்க காங்கிரஸ் முயன்று வருகிறதாம்.
ராஜ்யசபா உறுப்பினர்களான ஹேமமாலினி, ராம் ஜேட்மலானி, தாராசிங், பிமல் ஜலான், சந்தன் மித்ரா, கஸ்தூரி ரங்கன், நாராயண் சிங் பார்மர் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.
இதையடுத்து புதிதாக 7 பேர் தேர்வு செய்யப்படவுள்ளன். அதில் ஒருவராக சோம்நாத்தை சேர்க்க காங்கிரஸ் யோசித்து வருகிறது. இதுதொடர்பாக சோம்நாத்தை காங்கிரஸ் தரப்பில் அணுகியபோது அவர் சம்மதித்து விட்டதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் சார்பிலோ அல்லது சுயேச்சையாகவோ சோம்நாத் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடலாம் எனத் தெரிகிறது.
ராஜ்யசபா எம்.பியானார் ஜார்ஜ் பெர்னாண்டஸ்:
இந் நிலையில் மூத்த சோசலிச தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இன்று ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
லோக்சபா தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் கட்சியால் சீட் மறுக்கப்பட்டார் பெர்னாண்டஸ். இதையடுத்து சுயேச்சையாகப் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் அவர் பீகார் மாநிலத்தில் நடந்த ராஜ்யசபா இடைத் தேர்தலில் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவ் பதவி விலகியதால் இந்த இடத்திற்கு தேர்தல் நடந்தது.
இன்று ராஜ்யசபா உறுப்பினராக பெர்னாண்டஸ் பதவியேற்றுக் கொண்டார். அவர் பதவியேற்பதற்கு ஐக்கிய ஜனதாதள தலைவர் சிவானந்த் திவாரி உதவி புரிந்தார். அவருக்கு ராஜ்யசபா தலைவர் ஹமீத் அன்சாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
பல்வேறு உறுப்பினர்களும் பெர்னாண்டஸுக்கு வாழ்த்து தெரிவத்தனர்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications