நண்பர்கள் தினத்தில் நண்பர்கள், காதலரால் கற்பழிக்கப்பட்ட சிறுமி- தற்கொலை
மும்பை: நண்பர்கள் தினத்தை காதலன் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடிய பத்தாம் வகுப்பு சிறுமியை, அந்த நண்பர்களும், காதலரும் சேர்ந்து கற்பழித்து கொடுமை மும்பையில் நடந்துள்ளது. இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் அந்த 15 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
கற்பழிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் 20 முதல் 21 வயதுக்குள் இருக்கும். மொத்தம் நான்கு பேர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர், சிறுமியின் காதலன் ஆவார். அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பயிற்சி வகுப்புக்காக செல்வதாக கூறி அந்த சிறுமி கிளம்பிச் சென்றுள்ளார். பின்னர் தனது காதலன் ராஜீவை சந்தித்த அச்சிறுமி, அவருடன் நண்பர்கள் தினத்தைக் கொண்டாட விரும்புவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து இருவரும் கிளம்பிச் சென்றனர். அப்போது அவர்களுடன் ராஜீவின் நண்பர் சஞ்சய் அவர்களுடன் இணைந்து கொண்டார். அதன் பின்னர் மூன்று பேரும் நலஸ்போரா மேற்கில் உள்ள ஃபன் பியஸ்டா தியேட்டருக்குச் சென்றனர். அங்கு சிறுமிக்கு அறிமுகம் இல்லாத 2 பேர் காத்திருந்தனர். அவர்களும், சிறுமியுடன் இணைந்து கொண்டனர்.
தியேட்டரில் நிகழ்ச்சியை முடித்து விட்டு இரவில் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வழியில் வைத்து காருக்குள்ளேயே வைத்து அந்த சிறுமியை நான்கு பேரும் கற்பழித்துள்ளனர்.
தனது காதலன் மற்றும் அவனது நண்பர்களால் தான் கற்பழிக்கப்பட்டதால் அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்தார்.
அதிர்ச்சியுன் வீடு திரும்பிய அவர் வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் சொல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை காலை சிறுமியின் தாயார் அவரை எழுப்ப அறைக்கு வந்தபோது தனது மகள் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பிரேதப் பரிசோதனையில் கற்பழிக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து ராஜீவ் உள்ளிட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். ராஜீவ் பத்தாவது வகுப்புடன் படிப்பை நிறுத்தியவன். வேலையில்லாமல் சுற்றித் திரிந்துள்ளான். சஞ்சய் மற்றும் மற்ற இருவரும் ஒரு கார் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்த்து வருபவர்கள். மெக்கானிக் ஷாப்புக்கு வந்த ஒரு காரை எடுத்துக் கொண்டுதான் இவர்கள், அந்த சிறுமியை திட்டமிட்டு ஏமாற்றி அழைத்துச் சென்று கற்பழித்துள்ளனர்.
நண்பர்கள் தினத்தன்று நடந்த இந்த சம்பவத்தால் மும்பையில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications
