நாடு கடந்த தமிழீழ அரசு: கருணாநிதி-ஜெவுடன் பேசுவோம்: புலிகள்
டெல்லி: நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பது தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளோம் என்று நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பது தொடர்பான குழுவின் தலைவரும், சட்ட நிபுணருமான விஸ்வநாதன் ருத்ரகுமாரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக டெஹல்கா இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழர்களின் இலக்கான தமிழீழத்தை அடைவதற்கான முயற்சியாக நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த முயற்சியில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். தமிழர்களின் ஆயுத போராட்டத்தை இலங்கை ராணுவம் நசுக்கி விட்டாலும் அவர்களது சுதந்திர தாகத்தை அடக்கிவிட முடியாது.
இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழர்கள் தங்கள் அரசியல் அபிலாசைகளுக்காக போராட முடியாத நிலை உள்ளது. எனவே வெளியில் இருந்து தான் போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அதற்காகவே நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்க உள்ளோம். இதற்கு எந்த ஒரு நாட்டின் ஆதரவும் தேவையில்லை. இந்த அரசாங்கம் புலம்பெயர்ந்த தமிழர்களால் தேர்வு செய்யப்படும்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, பழ.நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களையும், பல்வேறு தரப்பட்ட மக்களையும் சந்தித்து பேசி ஆலோசனை நடத்த உள்ளோம்.
நாடு கடந்த தமிழீழ அரசின் அரசியலமைப்பு அவைக்கான தேர்தலை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்த உள்ளோம். இந்தப் பணியை விரைவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம்.
நாடு கடந்த தமிழீழ அரசானது சர்வதேச ஆதரவு மற்றும் சட்டப்பூர்வமான அங்கீகாரத்துடன் ஒரு அதிகார மையமாக திகழும்.
இந்த அரசு சம அதிகாரங்களை உடைய தமிழர் தேசம் மற்றும் சிங்கள தேசத்தை உருவாக்கும். இந்த முயற்சிக்கு சர்வதேச ஆதரவு மிகவும் முக்கியம். ஜனநாயக கோட்பாடு களுக்கு ஏற்ப இந்த அரசு அமைக்கப்பட இருப்பதால் இதற்கு ஜனநாயக நாடுகள் நிச்சயமாக ஆதரவு அளிக்கும் என்று நம்புகிறோம். இதற்கு சில நாடுகளிடம் இருந்து நல்ல பதிலும் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications