அழகிரி பேச்சு-நல்லகண்ணுவுக்கு சந்தேகம்
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி கூறியிருப்பதன்மூலம் இடைத்தேர்தல் ஜனநாயக முறையில் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் நடைபெறவுள்ள 5 தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துமீறல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் தடுக்கப்பட வேண்டும். ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்காத அளவுக்கு தேர்தல் நடைபெற வேண்டும்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அழகிரி பேசியிருக்கிறார். இதன்மூலம் அவர்களது நோக்கம் என்ன என்பது புரிகிறது. என்ன திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடிகிறது.
இந்தத் தேர்தல் அமைதியாக நடைபெறாது. பணத்தைக் கொடுத்து மக்களை வாங்க திட்டமிட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.
மத்திய, மாநில தேர்தல் அதிகாரிகள் இதைக் கவனத்தில் கொண்டு, தேர்தலில் அராஜகத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மக்கள் விழிப்புணர்வு பெற்றால்தான் இதை மாற்ற முடியும். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஜனநாயக கடமையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செய்கிறது என்றார் நல்லகண்ணு.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications