இளையாங்குடி தேர்தலை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை: இளையாங்குடியில் இடைத் தேர்தலை நடத்த தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
இதுதொடர்பாக மக்கள் மாநாட்டுக் கட்சி என்ற கட்சியின் மாநிலச் செயலாளர் சதீஷ்குமார் என்பவர் நேற்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், எங்களது கட்சியைச் சேர்ந்த கலைமணி இளையாங்குடியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
வேட்பு மனு பரிசீலனையின்போது கலைமணி மருத்துவமனையில் இருந்ததால் அருள்மொழி என்பவரை அனுப்பி வைத்திருந்தார்.
மனு பரிசீலனையின்போது, முன்மொழிந்தவரின் வாக்காளர் பட்டியல் எண் மாறியிருப்பதாக கூறி மனுவைத் தள்ளுபடி செய்துள்ளனர். ஆனால் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே போதும் என்பதே விதி. ஆனால் இதைக் கேளாமல் தேர்தல் அதிகாரி கலைமணியின் மனுவைத் தள்ளுபடி செய்து விட்டார்.
ஆனால் இதே காரணத்தைக் காட்டி தள்ளுபடி செய்யப்பட்ட பர்கூர் தேமுதிக வேட்பாளர் சந்திரன், ஸ்ரீவைகுண்டம் சுயேச்சை வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் பின்னர் ஏற்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நாங்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டும் பலன் இல்லை.
எனவே எங்களது வேட்பாளரின் பெயரை வேட்பாளர் பட்டியலில் இடம் பெறச் செய்ய உத்தரடவட வேண்டும். அதுவரை தேர்தலை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று நீதிபதி சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவைப் பரிசீலித்த நீதிபதி, இன்று விசாரிப்பதாக அறிவித்தார்.
இன்று தீர்ப்பளித்த நீதிபதி, இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications