தமிழகம் அனுப்பும் 4வது கட்ட நிவாரண பொருட்கள்
சென்னை: இலங்கையில் அகதி முகாம்களில் தங்கியுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 4வது கட்டமாக ரூ. 15 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் நாளை மறுதினம் அனுப்ப்படுகின்றன.
இலங்கையில் அகதி முகாம்களில் தங்கியுள்ள சுமார் 3 லட்சம் தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இதுவரை 3 முறை நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
முதல் கட்டமாக ரூ.10 கோடி மதிப்புள்ள உணவுப் பொருட்கள், துணிகள் அனுப்பி வைக்கப்பட்டன. 2வது கட்டமாக ரூ.6.62 கோடி மதிப்புள்ள பாத்திரங்கள், உணவு ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன.
3வது கட்டமாக ரூ.6.90 கோடி மதிப்புள்ள உணவு, துணி மற்றும் மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டன.
இந் நிலையில் இப்போது 4வது கட்டமாக ரூ.15 கோடி மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளன. இதில்
சமையல் பாத்திரங்கள், தட்டுக், மளிகைப் பொருட்கள், பிளாஸ்டிக் பாய்கள், பிளாஸ்டிக் கேன், செருப்புள், குழந்தைகளுக்கான துணிகள், வேட்டி- சேலை, லுங்கி, நைட்டி, போர்வைகள் ஆகியவை அடங்கும். 100 கண்டெய்னர்களில் இந்தப் பொருட்கள் ஏற்றப்படும்.
சென்னை துறைமுகத்தில் இருந்து 6ம் தேதி எம்.சி.ஆம்ஸ்டர்டாம் என்ற நிவாரணக் கப்பலில் இந்தப் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. இந்தக் கப்பல் 8ம் தேதி காலை கொழும்பு துறைமுகம் சென்றடையும்.
இதையடுத்து இந்த நிவாரணப் பொருட்களை கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் பெற்று ஐ.நா.சபை மூலம் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு வழங்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications