கருணாநிதியுடன் எதியூரப்பா சந்திப்பு - சிலை திறப்பு அழைப்பிதழ் கொடுத்தார்
அவருக்கு சென்னையில் நடைபெறவுள்ள சர்வக்ஞர் சிலை திறப்புக்கான அழைப்பிதழை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் அல்சூர் ஏரிக்கரையில் அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை 18 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 9-ந் தேதி திறக்கப்பட உள்ளது.
கர்நாடக அரசே திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவை ஏற்று நடத்துகிறது. இதேபோல சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலை திறப்பு விழா வருகிற 13-ந் தேதி நடக்க உள்ளது.
திருவள்ளுவர் சிலை திறப்புக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து வருகின்றன. விழாவை அரசே ஏற்று நடத்துவதால் அழைப்பிதழையும் கர்நாடக அரசே அடித்துள்ளது. கன்னடம் மற்றும் தமிழில் அழைப்பிதழ் அடிக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழாவுக்காக முதல்வர் கருணாநிதி பெங்களூர் வந்துள்ளார். பெங்களூர் அருகே உள்ள தனது மகள் செல்விக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியுள்ளார்.
அவரை நேற்று மாலை எதியூரப்பா சந்தித்தார். வீட்டுக்கு வந்த எதியூரப்பாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கருணாநிதியின் மகள் செல்வி, அவரது கணவர் முரசொலி செல்வம் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
முதல்வர்கள் இருவரும் சால்வைகளைப் பரிமாறிக் கொண்டனர். கருணாநிதி எதியூரப்பா மலர் மாலையும் அணிவித்தார்.
பின்னர் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா அழைப்பிதழைக் கொடுத்து விழாவுக்கு வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.
அதேபோல சர்வக்ஞர் சிலை திறப்புக்கான அழைப்பிதழை கருணாநிதி, எதியூரப்பாவிடம் வழங்கினார்.
இதையடுத்து இரு தலைவர்களும் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
சந்திப்பை முடித்துக் கொண்டு வெளியே வந்த முதல்வர் எதியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
திருவள்ளுவர் மற்றும் சர்வக்ஞர் சிலை திறப்பு விழா இரு மாநிலங்களுக்கு இடையே உறவுப்பாலமாக அமையும். திருவள்ளுவர் சிலை திறப்பு குறித்து அரசு எடுத்த முடிவுக்கு கர்நாடக மக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர். சிலை திறப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை அழைத்து அவர்களது மனமாற்றத்துக்கு முயற்சிப்பேன்.
திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. விழாவையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்













Click it and Unblock the Notifications