ஜனநாயகத்துக்காக தேர்தலை புறக்கணிக்கும் ஜெ!

கொடநாடு எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்து வரும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் மோசடிகள் செய்ய முடியும் என்று பல வருடங்களாக நான் கூறி வந்துள்ளேன்.
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலையடுத்து பாஜக, தெலுங்கு தேசம், பாமக மற்றும் இதர கட்சிகள் மின்னணு எந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று குரல் கொடுத்து வருகின்றன. பாமக இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடுகள் செய்யது என்பது முடியாத காரியம் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது.
இதில், எவ்வளவு சுலபமாக மோசடிகள் நிகழ்த்த முடியும் என்பதை அமெரிக்காவில் ஹூஸ்டன் நகரில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கணினி பாதுகாப்புச் சட்டம் படிக்கும் மாணவர்கள் அனுபவப்பூர்வமாக கற்று வருகின்றனர்.
வாக்குப் பதிவு எந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை சரிபார்க்கக்கூடிய வகையில் அச்சிடப்பட்ட தகவலை உருவாக்காத வரையில் மோசடி குறித்த புகார்களின் உண்மையை கண்டுபிடிக்க முடியாது.
வாக்குப் பதிவு எந்திரங்களில் மிக எளிதாக மோசடி செய்யலாம் என்பதை ஹைதராபாத்தை சேர்ந்த ஜன் சைதன்ய வேதிகா என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற கணினி பொறியாளர் 2.8.2009ம் தேதியன்று தெளிவுபடுத்திக் காட்டிய பத்திரிகைச் செய்தியை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் மட்டுமில்லாமல் பொதுமக்களும் இந்த உண்மையை உணர வேண்டும். அவர்களின் வாக்குகள் சம்பந்தப்பட்ட வேட்பாளருக்கு சென்றடைகிறதா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த நிலை இல்லாதபட்சத்தில் ஜனநாயக முறைகள் அனைத்தும் கேலிக்கூத்தாகவே இருக்கும். உண்மையான ஜனநாயகம் மீண்டும் மலர வேண்டும் என்பதை உறுதி செய்யத்தான் தமிழகத்தில் நடைபெறும் 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிக்க முடிவு செய்தது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
முன்பு தேர்தல்களில் வென்றபோதெல்லாம் ஏன் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்யலாம் என்பதை ஜெயலலிதா சுட்டிக் கட்டவில்லை என்று தெரியவில்லை.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications