மின்னணு எந்திர முறைகேட்டை நிரூபிக்க தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிபந்தனை
வேலூர்: மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நடுநிலையான பொறியாளர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரைக் கொண்ட குழுவின் முன் நிரூபிக்க தயாராக உள்ளதாக தேர்தல் ஆணையத்துக்கு பாமக பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் அக் கட்சி கூறியுள்ளது.
இது குறித்து வேலூரில் அக் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறுகையில்,
திமுகவையும், கருணாநிதியையும் எதிர்க்கும் ஒரே கொள்கையுடன் ராமதாஸ் செயல்பட்டு வருகிறார் என்று கலைஞரின் பத்திரிகை பிரச்சாரம் செய்து வருகிறது.
திமுகவை ஒரு கட்சி என்ற முறையிலும், கருணாநிதியை தனிப்பட்ட முறையிலும் விமர்சனம் செய்வது என் நோக்கமல்ல. திமுகவின் தவறுகளையும், மக்கள் விரோத கொள்கைகளையும், ஜனநாயக விரோத கொள்கைகளையும், அரசாங்கத்தின் தவறுகளையும் சுட்டிக்காட்டுவதும் மக்கள் பிரச்சனைகளுக்காக போராடுதும் தான் பாமகவின் செயல்பாடாக இருந்து வருகிறது.
இதேபோல்தான் 2001-06 கால கட்டத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்றபோதும், நாங்கள் பிரதான எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செயல்பட்டோம்.
பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற முறையில் எங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகிறோம். எங்களை குறை கூறும் திமுக இதற்கு முன்பு போராட்டமே நடத்தியதில்லையா?.
காமராஜர் ஆட்சி நடைபெற்ற போது அவரது அரசை எதிர்த்து திமுக போராடியதில்லையா?. காமராஜரை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று கருணாநிதியால் கூற முடியுமா?. விலைவாசி உயர்வு போராட்டம் நடத்தி அண்ணா போன்ற தலைவர்களும் சிறை சென்றிருக்கிறார்கள்.
திமுக செய்தது போலத்தான் நாங்கள் இப்போது மக்கள் பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தி வருகிறோம்.
ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் பாலாறு, ஆந்திர அரசின் அணை கட்டும் திட்டத்தாலும், மணல் கொள்ளையாலும், தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுநீராலும் இன்றைக்கு பாழ்பட்டு பாலைவனமாகக் காட்சி அளிக்கிறது. இதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே லட்சிய கூட்டணி இருப்பதாக கருணாநிதி கூறுகிறார். மத்தியிலும் மாநிலத்திலும் இவர்களுடைய ஆட்சிதான் நடக்கிறது. அப்படியானால் ஆந்திராவின் அணை கட்டும் திட்டத்தை ஏன் இவர்களால் தடுத்து நிறுத்த முடியவல்லை.
இந்தப் பிரச்சனைக்காக பாமகதான் தொடர்ந்து போராடி வருகிறது. அதன் தொடர்ச்சியாக பாலாற்றில் ஆந்திர அரசு அணை கட்டுவதை கண்டித்து வரும் 24ம் தேதி வேலூரில் பாமக சார்பில் கண்டன பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தவிருக்கிறோம்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் முறைகேடுகள் குறித்து நிரூபிக்குமாறு தேர்தல் ஆணையம் எங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதற்கு நாங்களும் பதில் அனுப்பியுள்ளோம்.
நடுநிலையான பொறியாளர்கள், நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுனர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரை கொண்ட குழுவை அமைத்து இந்த புகாரை நிரூபிக்க தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அந்த பதில் கடிதத்தில் நாங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
நாங்கள் அனுப்பியுள்ள பதில் கடிதத்தையும் பொதுமக்களுக்கு நாளை வெளியிட உள்ளோம் என்றார் ராமதாஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications