தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு
புதுக்கோட்டை: தமிழக மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு அட்டகாசம் செய்துள்ளனர் இலங்கை கடற்படை வீரர்கள். இதில் 3 மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 217 விசைப்படகுகளிலும், ஜெகதாபட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 115 விசைப்படகுகளிலும் மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை காலையில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அதேபோல, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த லயோலா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த அடைக்கலம் (வயது 55), ஜகுபர் சாதிக் (30), விமல்(24) ஆகியோரும் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அடைக்கலம், ஜகுபர் சாதிக், விமல் ஆகியோர் கடலில் வீசி இருந்த வலையை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர்.
இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தங்கள் கைகளை உயரே உயர்த்தி எங்களை கொன்று விடாதீர்கள். இனிமேல் நாங்கள் இந்த பகுதிக்கு வரமாட்டோம் என்று சத்தம் போட்டு உள்ளனர்.
இருந்தாலும் ஆத்திரம் தணியாத கடற்படையினர் தங்கள் விசைப்படகின் பின்பகுதியால் மீனவர்களின் விசைப்படகை மோதி உள்ளனர். இதில் விசைப்படகின் பலகைகள் உடைந்து படகு சேதம் அடைந்தது.
இதையடுத்து தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதை விட்டு விட்டு அவசரமாக கரை திரும்பி உயிர் தப்பியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications