டெல்லி வந்தார் தஸ்லீமா-ரகசிய இடத்தில் தங்க வைப்பு

'லஜ்ஜா' என்ற புத்தகத்தை எழுதி சர்ச்சையில் சிக்கியவர் தஸ்லீமா. அவருக்கு அங்கு இஸ்லாமிய அமைப்புகள் மிரட்டல் விடுத்ததையடுத்து 1994ம் ஆண்டு அவர் வங்காளதேசத்திலிருந்து வெளியேறினார்.
இந்தியா, பிரான்ஸ், ஸ்வீடன் உள்பட பல நாடுகளில் பாதுகாப்பாகத் தங்கியிருந்த அவர் கடைசியாக அவர் கொல்கத்தாவில் குடியேறினார்.
இந் நிலையில் 2007ம் ஆண்டு அங்கும் அவருக்கு எதிராக போராட்டம் வெடித்தது. இதையடுத்து மேற்கு வங்க அரசு அவரை ராஜஸ்தானுக்கு அனுப்பியது. ஆனால் அங்கும் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியதால் மத்திய அரசி்ன் உதவியோடு டெல்லியில் குடியேறினார். அரசு அவரை டெல்லியில் ரகசிய இடத்தில் தங்க வைத்தது.
இந் நிலையில் இந்தியாவிலும் அவருக்கு எதிர்ப்பு வலுக்கவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி சுவீடன் நாட்டுக்குச் சென்றார். அங்கிருந்து ஐரோப்பாவில் வேறு ஏதோ ஒரு நாட்டில் ரகசியமாக குடியேறி அந் நாட்டு பாதுகாப்போடு தங்கியிருந்தார்.
இந் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனது விசாவை புதுப்பித்துக் கொள்ள இந்தியா வந்தார். அப்போது ஆகஸ்ட் 17ம் தேதி வரை அவரது விசாவை நீட்டித்த மத்திய அரசு உடனே அவரை திருப்பி ஐரோப்பாவுக்கே அனுப்பிவிட்டது.
அவரது இந்திய விசா காலம் வரும் 17ம் தேதியோடு முடிவடைகிறது. இந் நிலையில் தஸ்லீமா இன்று காலை டெல்லி இந்திரா காந்தி சர்வேதச விமான நிலையம் வந்தார். அவர் எந்த நாட்டிலிருந்து வந்தார் என்று தெரியவில்லை.
அவரது வருகையை அறிந்து காத்திருந்த ஐ.பி. பிரிவினர் அவரை உடனடியாக எங்கேயோ ஒரு ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விட்டனர்.
தஸ்லீமா தனக்கு இந்தியாவில் நிரந்தர குடியுரிமை கேட்டு வருகிறார். ஆனால், மத்திய அரசு இந்த விஷயத்தில் இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications