ராகிங்கில் ஈடுபட்டதால் மாணவர்களுக்குள் மோதல் - 19 பேர் கைது
சென்னை: காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ராகிங் செய்த மாணவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதையடுத்து ராகிங்கில் ஈடுபட்ட 19 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்தூரில் தனியார் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு வெளிமாநில மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள், அந்த பகுதியில் வாடகைக்கு வீடுகள் எடுத்து தங்கி உள்ளனர்.
இரண்டாம் ஆண்டு மாணவர் அர்ஸ் குப்தா, காஞ்சிபுரத்தில் ரயில்வே சாலையில் தங்கி இருக்கிறார். இவரை, அதே கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர் அபிகாந்த் உட்பட 6 பேர், கடந்த 3ம் தேதி இரவு கேலி, கிண்டல் செய்தனர்.
இதுபற்றி கல்லூரி முதல்வரிடம் அர்ஸ் குப்தா புகார் செய்தார். இதை அறிந்த அபிகாந்த் ஆத்திரத்துடன் குப்தா அறைக்கு நேற்று சென்றார். அங்கு குப்தா இல்லை. ஏனாத்தூரில் மற்றொரு மாணவர் அறையில் குப்தா இருந்தது தெரியவந்தது.
உடனே அபிகாந்த் அவரது நண்பர்கள் 19 பேர் அங்கு விரைந்தனர். குப்தா மற்றும் அவருடன் இருந்தவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதில் குப்தா, ரிகேஷ் ஆனந்த் உட்பட 9 பேர் காயமடைந்தனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
ரிகேஷ் ஆனந்த், மேல்சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அபிகாந்த் உள்பட 19 மாணவர்கள் மீது ராகிங் தடுப்புச் சட்டம், சட்ட விரோதமாக கூடுதல், கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அதன்பின்னர் அபிகாந்த் உள்பட 19 மாணவர்களும் கைது செய்யப்பட்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications