Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

6 வயதில் 50 கிலோ-சிரமத்தில் மதுரை சிறுமி!

Subscribe to Oneindia Tamil

மதுரை: 6 வயதே ஆன சிறுமியின் உடல் எடை தொடர்ந்து அதிகரித்து 50 கிலோ ஆனது. இதற்கு சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனையில் அந்த சிறுமி
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரை சமயநல்லூரைச் சேர்ந்தவர் தினகரன். பலசரக்கு கடை வேன் டிரைவர். இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களது மூத்த மகள் முத்துராக்கு (6). முத்துராக்கு பிறக்கும் போது 2.5 கிலோ எடையில் இருந்தார்.

பின்பு, குழந்தை, வளர வளர உடல் எடை அதிகரித்தது. பல மருத்துவ மனைகளில் அவருக்கு பரிசோதனை நடத்தியும், எடை அதிகரிப்பிற்கு காரணம் தெரியவில்லை.

ஒரு குழந்தை ஆறு வயதில் 18 முதல் 20 கிலோ வரை எடைதான் இருக்க வேண்டும். ஆனால், முத்துராக்கு 50 கிலோ எடை உள்ளார். இவரது இரண்டரை வயது தங்கை விஜயலட்சுமி சாதாரணமாக பதினொன்றரை கிலோ எடை
மட்டுமே உள்ளார்.

இந்த நிலையி்ல்,முத்துராக்குக்கு பத்து நாட்களுக்கு முன்பு
மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக முத்துராக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

முதற்கட்ட பரிசோதனையில், சிறுநீரகம், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிய வந்தது. உடல் எடை கூடுவதற்கான காரணத்தை கண்டறிய மருத்துவர்கள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் கண்டறிய கடும் முயற்சி எடுத்து வருகின்றனர். ஆனால் மருத்துவ இதற்கான கட்டணம் செலுத்த பணம் இன்றி தவித்து வருகின்றனர்.

உதவி செய்ய முன்வரலாம்...

சிறுமி முத்துராக்குக்கு உதவ முன் வருபவர்கள் 90037 74295 என்ற எண்ணுக்கோ அல்லது மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவையோ தொடர்பு கொண்டு உதவி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+