பாரிஸ் விமானத்தில் தீ-8 பயணிகள் காயம்

பாரிஸ் ஒரிலி விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் நாட்டின் வியூலிங் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் ஏ-320 விமானம் ஸ்பெயின் நாட்டின் அலிகாண்டே என்ற இடத்துக்குக் கிளம்பத் தயாரானது.
அதில் 169 பயணிகள் இருந்தனர். என்ஜின்கள் வேகமாக இயங்க ஆரம்பித்து விமானம் புறப்பட்டத் தயாரான நிலையில் ஒரு என்ஜினில் தீப் பிடித்தது.
இதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் விமானியை எச்சரி்க்கவே உடனடியாக அவசரக் கதவுகள் திறக்கப்பட்டு சறுக்குப் பாதையை திறந்துவிட்டனர் ஏர்-ஹோஸ்டஸ்கள்.
அதன்மூலம் பயணிகள் முட்டிமோதிக் கொண்டு இறங்க முயற்சித்தபோது 8 பேர் படுகாயமடைந்தனர்.
தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தன. காயமடைந்த பயணிகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
ஏர்ஹோஸ்டஸ்கள் அலறியபடி ஸ்பானிஷ் மொழியில் பயணிகளை விமானத்திலிருந்து இறங்குமாறு கூறயதால் தான் பெரும் குழப்பம் ஏற்பட்டதாகவும், பயணிகளில் பெரும்பாலானவர்கள் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதாலும், அவர்களுக்கு ஸ்பானிஷ் தெரியாததால் ஏர் ஹோஸ்டஸ்கள் பேசியது புரியாமல் அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடியதால் தான் பலரும் காயமடைந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தையடுத்து இன்னொரு விமானத்தை அந்த நிறுவனம் அனுப்பியது. ஆனால், பெரும்பாலான பயணிகள் அதில் பயணிக்க விரும்பவில்லை என்று கூறி திரும்பிச் சென்றுவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications