ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் வருமான வரி ரெய்ட்!
சென்னை: நாட்டின் இரு முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்குச் சொந்தமான 25 இடங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ.23 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு டைரக்டர் ஜெனரல் கே.கே.திரிபாதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ரியல் எஸ்டேட் மற்றும் அடுக்குமாடி வீடுகளை கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள 2 பிரபல நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.
இந்த தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் 200க்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டார்கள்.
இந்த நிறுவனங்களின் தொடர்புடைய சென்னை, வேலூர், கோயம்புத்தூர், ஹைதராபாத், கொச்சி மற்றும் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மற்றும் பாலி ஆகிய இடங்களில், இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள் என 25க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில் பல்வேறு முறைகேடான ஆவணங்களும், கணக்கில் வெளிவராத பண பரிவர்த்தனைகளும் மற்றும் வீடு, நிலம் விற்றது தொடர்பான வெளியில் காட்டப்படாத ரசீதுகளும் சிக்கின.
இவ்வாறாக ரூ.22 கோடி மதிப்பிலான வரி ஏய்ப்பு செய்யப்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, கணக்கில் காட்டப்படாத ரூ.1.5 கோடி அளவிலான நகை, ரொக்கப்பணம் மற்றும் இதர சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?!












Click it and Unblock the Notifications