கேபி கைது விவகாரம் - விசாரணைக்கு தாய் பிரதமர் உத்தரவு

கேபி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் வைத்துக் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு கூறுகிறது. ஆனால் இதை தாய்லாந்து பிரதமர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கேபி கைது குறித்து எனக்கு நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் தாய்லாந்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன். அனைத்து விவரங்களையும் எனக்கு அளிக்குமாறு பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
தாய்லாந்து அரசின் தற்காலிக செய்தித் தொடர்பாளர் பானிடன் வட்டநாயக்கோன் கூறுகையில், முதலில் கிடைத்த செய்திகளின்படி தாய்லாந்துக்குள் கேபி அவ்வப்போது சென்றதாக தெரிகிறது. இருப்பினும் அவர் தாய்லாந்துக்குள் வைத்துக் கைது செய்யப்பட்டாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
தாய்லாந்துப் பெண்ணைத்தான் கேபி மணந்துள்ளார். தாய்லாந்தின் வட பகுதியில் அவர் வசித்து வந்தார் என்றார்.
சிங்கப்பூரில் கைதா...?
தாய்லாந்து சிறப்புப் போலீஸ் பிரிவு தலைவர் தீரதேஜ் ரோட்போட்டாங் கூறுகையில், உண்மையில் சிங்கப்பூரில் வைத்துத்தான் கேபி கைது செய்யப்பட்டுள்ளார். தாய்லாந்தில் அவர் கைதாகவில்லை.
கேபியின் மனைவி தாய்லாந்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி விட்டன. ஆனால் அவர் தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு அடிக்கடி போய் வருவது வழக்கம் என்றார்.
ராணுவத்தின் தீவிர விசாரணையில் கேபி...
இதற்கிடையே கொழும்பு கொண்டு வரப்பட்டுள்ள கேபியிடம் ராணுவ அதிகாரிகள் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications