12ம் தேதி மகளிர் சிறப்பு ரயில் - ப.சிதம்பரம் தொடங்கி வைக்கிறார்
சென்னை: சென்னையில் மகளிர் சிறப்பு ரயில் சேவையை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வருகிற 12ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
முன்னதாக ரயில்வே அமைச்சர் மமதா பானர்ஜி, இந்த ரயில் சேவையை டெல்லியிலிருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது ப.சிதம்பரம் ரயிலைத் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..
12-ந் தேதி காலை 8.30 மணிக்கு பெண்களுக்கான முதல் மின்சார ரெயில் (மகளிர் மட்டும்) இயக்கப்படுகிறது. தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை செல்லும் இந்த மின்சார ரெயிலை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
தாம்பரம்- சென்னை கடற்கரை, அரக்கோணம்-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பெண்களுக்கான சிறப்பு மின்சார ரெயில் வரும் 12-ந் தேதி தாம்பரத்தில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைக்கப்படும்.
காலை 8.37 மணிக்கு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு பெண்களுக்கான சிறப்பு மின்சார ரெயில் இயக்கப்படும்.
அதே போல காலை 8.38 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு பெண்கள் மின்சார ரெயில் இயக்கப்படும். காலை 8.39 மணிக்கு வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு பெண்களுக்கான சிறப்பு மின்சார ரெயில் புறப்பட்டு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications