தமிழகத்தில் 4 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள்!

தேசிய அளவில் மகாராஷ்டிராவில்தான் அதிக அளவிலான செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் செல்போன் வைத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் டிராய் வைத்துள்ள புள்ளி விவரப்படி, தமிழகத்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தில் உள்ள செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 4 கோடியாக உயர்ந்துள்ளது.
இதில் சென்னை நீங்கலாக, தமிழகத்தில் 3.03 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். சென்னை வட்டத்தில் 96.51 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
லேன்ட் லைன் போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை தமிழக வட்டத்தில் 22.24 லட்சம் ஆக உள்ளது. இது கடந்த மே மாதத்தில் 22.36 லட்சமாக இருந்தது. தற்போது சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னை வட்டத்தில் ஜூன் மாத நிலவரப்படி 14.10 லட்சம் பேர் லேன்ட் லைன் வைத்துள்ளனர்.
இதன் மூலம் தமிழகத்தில் போன் இணைப்புகள் வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை 4.36 கோடியாக உயர்ந்துள்ளது. இது இந்த ஆண்டு இறுதிக்குள் 6.65 கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.
தமிழகத்திற்குள் புதிதாக நுழைந்த எம்டிஎஸ் மற்றும் ஐடியா செல் போன் நிறுவனங்கள் ஒரே மாதத்தில் சென்னை உள்ளிட்ட தமிழக வட்டத்தில் 1,21,985 வாடிக்கையாளர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளன.
இதில் எம்.டி.எஸ் நிறுவனத்திற்கு 63 ஆயிரத்து 525 வாடிக்கையாளர்களும், ஐடியாவுக்கு 58 ஆயிரத்து 460 வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
நாட்டிலேயே சென்னை நகரில்தான் போன்கள் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. இங்கு போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 131 சதவீதமாக உள்ளது. அதாவது 100 பேருக்கு 131 செல்போன் இணைப்புகள் என்ற அளவில் உள்ளது.
சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு மாநில தொலைத் தொடர்பு வட்டம் நாட்டிலேயே போன் வைத்திருப்பவர்கள் வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. முதலிடத்தைப் பிடித்திருப்பது மகாராஷ்டிரா. இங்கு 5.3 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். 3.3 கோடி வாடிக்கையாளர்களுடன் ஆந்திரா 3வது இடத்தில் உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications