தேமுதிக ஒரு தனியார் கம்பெனி-மத்திய அமைச்ச்ர் நெப்போலியன்
தூத்துக்குடி: விஜயகாந்துக்கு சினிமா வாய்ப்பு குறைந்துவிட்டதால் தேமுதிக கட்சியை ஒரு தனியார் கம்பெனி போல ஆரம்பித்து நடத்தி வருகிறார் என மத்திய அமைச்சர் நெப்போலியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் பிரசாரத்தில் திமுக ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீவைகுண்டத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரான காங்கிரஸ் கட்சியின் சுடலையாண்டியை ஆதரித்து மத்திய சமூகநிதி வளர்ச்சி துறை அமைச்சர் நெப்போலியன் தேர்தல் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
விஜயகாந்தை எனக்கு நடிகர் சங்கத்தில் இருக்கும் போதே தெரியும். அவர் ரொம்ப பேசுவார். ஆனால், எதுவும் செய்யமாட்டார்.
அவருக்கு சினிமா வாய்ப்பு குறைந்துவிட்டதால் ஒரு தனியார் கம்பெனி போல தேமுதிக என்ற கட்சியை துவக்கினார். அவருக்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது.
அவர் திமுகவுக்கு போட்டியல்ல. முக்கிய போட்டிக் கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்து விட்டது. என்றாலும் நாம் ஜனநாயகத்தை மதித்து தேர்தலை சந்திக்கிறோம்.
மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தொடர காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றார் நெப்போலியன்.












Click it and Unblock the Notifications