தமிழகத்தில் 3 மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும் டமிஃப்ளூ

சென்னையில் இன்று 4 வயது சிறுவன் பன்றிக் காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளான். இதையடுத்து நாளை உயர் மட்டக் குழுக் கூட்டத்தை முதல்வர் கருணாநிதி கூட்டியுள்ளார்.
இந்த நிலையில் பன்றிக் காய்ச்சல் வந்தோர் பயன்படுத்தக் கூடிய டமிஃப்ளூ மாத்திரைகள் தமிழகத்தில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் கூட கிடைக்காத நிலை காணப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
தற்போது சென்னையில் உள்ள தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை, அரசு பொது மருத்துவமனை மற்றும் கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் மட்டுமே இந்த மாத்திரை கிடைக்கிறது.
அதேசமயம், முக்கிய அரசு மருத்துவமனைகளில் கூட இந்த மாத்திரை கிடைக்காத நிலை காண்படுகிறது.
மாவட்ட மருத்துவமனைகளுக்கு இந்த மாத்திரைகளை போதிய அளவில் சப்ளை செய்யுமாறு அரசு உத்தரவிட்டும் கூட இன்னும் அந்தப் பணியை சுகாதாரத் துறை அதிகாரிகள் முடுக்கி விடவில்லை.
மேலும் பன்றிக் காய்ச்சல் தொடர்பான விழி்ப்புணர்வுத் தகவல்கள், பிரசாரம் போன்றவற்றையும் இன்னும் தமிழக அரசின் சுகாதாரத் துறை முடுக்கி விடவில்லை. இதனால் மக்கள் மத்தியில் தேவையில்லாத பீதிகள் அல்லது தேவையில்லாமல் சிலர் பீதியைக் கிளப்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
டமிஃப்ளூ மாத்திரைகளை அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்டவற்றுக்கு வழங்குவதோடு, பன்றிக் காய்ச்சல் தொடர்பான தேவையற்ற பீதிகளைத் தடுக்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications