வேட்டி, சேலைக்கு ஓட்டு கேட்பது தான் சாதனையா?-விஜயகாந்த்
கம்பம்: சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்க முடியாமல் வேட்டி, சேலைகளை கொடுத்து ஓட்டு கேட்பது தான் சாதனையா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் வரும் 18ம் தேதி ஐந்து சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. இத்தேர்தலை அதிமுக உள்ளிட்ட முக்கிய கட்சிகள் புறக்கணித்துவிட்டதால் திமுக, தேமுதிக இடையே நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தலில் தங்களது கட்சியின் வாக்குகளை வெகுவாக அதிகரிக்க தேமுதிக தலைவர் விஜயகாந்த் முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் விறுவிறு பிரசாரம் செய்து வருகிறார்.
கம்பம் தொகுதியில் வேட்பாளர் அருண்குமாரை ஆதரித்து நேற்று இரண்டாவது நாளாக பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,
திமுகவினர் வீடுகள் தோறும் வேட்டி, சேலைகளை இலவசமாக கொடுத்து வருகின்றனர். ரூ. 500 பணம் கொடுக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் இந்த பணத்தில் ஏறிய விலைவாசி இறங்கிவிடுமா?
சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல் வேட்டி, சேலைகளை கொடுத்து ஓட்டு கேட்பது தான் சாதனையா?
இது வரவழைக்கப்பட்ட தேர்தல்...
சுயலாபத்துக்காக கட்சி மாறி செல்லும் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்யும் தொகுதிகளில் இடைத்தேர்தலே நடத்தக்கூடாது. ஒரு எம்எல்ஏ மரணம் அடைந்தால் மட்டுமே இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தல் வரவழைக்கப்பட்ட தேர்தல். மக்கள் வரிப்பணத்தை தேவையின்றி செலவிடும் தேர்தல்.
வாக்காள பெருமக்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். காசுக்கு ஓட்டுபோடாதீங்க, நல்லவர்களுக்கு ஓட்டு போடுங்க என்றார் விஜயகாந்த்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications