கேபி கைது செய்யப்பட்டது குறித்து தெரியாது - மலேசிய பிரதமர்
கோலாலம்பூர்: செல்வராசா பத்மநாதன் என்கிற கேபி மலேசியாவில் வைத்துக் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் மலேசிய பிரதமர் நஜீப் ரஸ்ஸாக்.
கேபி எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார் என்பதை இலங்கை அரசு உறுதியாகத் தெரிவிக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் தரப்பில் கூறுகையில், கோலாலம்பூரிலிருந்து அவரை பாங்காக்குக்கு கடத்திச் சென்று அங்கு வைத்து இலங்கை உளவுப் படையினர் கைது செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் தாய்லாந்தில் வைத்து கேபி கைது செய்யப்படவில்லை என்று தாய்லாந்து பிரதமர் கூறி விட்டார். இதையடுத்து மலேசியாவின் மீது இலங்கைத் தமிழர்களின் பார்வை படிந்துள்ளது.
ஆனால் கேபி கைதை உறுதிப்படுத்த மலேசிய பிரதமர் நஜீப் ரஸ்ஸாக் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், எனக்குத் தெரியாது. இதுகுறித்த விவரங்கள் என்னிடம் இல்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications