துண்டு போட்டு கோவிலில் கொள்ளை-5 மாதம் சிறை
திருத்தணி: திருத்தணி முருகன் கோவில் உண்டியலுக்குள் ஈரத் துண்டை உள்ளே விட்டு அதில் ஒட்டிவரும் நோட்டுக்களை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 5 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.
ஆந்திர மாநிலம் சந்திரகிரி பெத்தபேட், பிடிஐ காலனியைச் சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் ஜெமினிகணேசன் (32). இவர் பல நாட்களாக திருத்தணி முருகன் கோவில் உண்டியலில் நூதனமான முறையில் பணத்தை திருடி வந்துள்ளார்.
அவர் கோயிலில் யாரும் இல்லாத சமயத்தில் உண்டியலுக்குள் ஈரத்துண்டை போடுவார். பின்னர் அதில் ஒட்டி வரும் பணத்தை எடுத்து கொண்டு போய்விடுவார். தினமும் இப்படி பல முறை செய்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப கடந்த 17.2.2009ம் அன்று அவர் வழக்கம் போல் துண்டை நனைத்து பணத்தை எடுத்து கொண்டிருந்த போது கோவில் இணை ஆணையராக இருந்த தனபாலிடம் கையும், களவுமாக மாட்டினார்.
இதையடுத்து அவர் திருத்தணி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப் பதிவு செய்து ஜெமினி கணேசனை செய்து சிறையில் அடைத்தார்.
தற்போது வழக்கு திருத்தணி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முத்துக்குமாரி முன்னிலையில் நடந்தது. அப்போது நீதிபதி ஜெமினி கணேசனுக்கு 5 மாதம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications