ஹஜ் பயணிகளுக்கு பாஸ்போர்ட் அவசியம்-விண்ணப்ப தேதி நீட்டிப்பு
மதுரை: ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு பாஸ்போர்ட் கட்டாயம் தேவை என சவுதி அரசு புதிய உத்தரவு போட்டுள்ளது. இதனால் இதுவரை பாஸ்போர்ட் பெறாதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உரிய பயண ஆவணங்கள் இருப்பவர்களை மட்டுமே ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்க முடியும் என்று சவுதி அரேபிய அரசு கூறியுள்ளது. இதுவரை ஹஜ் பயணிகள் சிறப்பு பயண அனுமதி பெற்று சவுதி அரேபியாவிற்கு சென்று வந்தனர்.
ஆனால், தற்போது பாஸ்போர்ட் உடன், வைரஸ் காய்ச்சல் தடுப்பு குறித்த சான்றிதழும் அவசியம் என்று அந்த நாட்டு அரசு கோரியுள்ளது.
பல்வேறு மாநில ஹஜ் கமிட்டிகளால் ஹஜ் பயணம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேரில் 20 ஆயிரம் பேர் மட்டுமே பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான சிறப்பு பாஸ்போர்ட் பெறுவதற்கான தேதி ஜூலை 31 ம் தேதியுடன் முடிவடைந்து விட்டபோதிலும், இதுவரை பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்காதவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கலாம்.
அவர்களுக்கு உடனே பாஸ்போர்ட் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அரசின் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications