முடிந்தது பி.இ. கவுன்சிலிங்-30199 இடங்கள் காலி!
சென்னை: தமிழகத்தில் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் பி.இ. படிப்புக்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. வகுப்புகள் செப்டம்பர் 7ம் தேதி தொடங்குகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தில் மீதமுள்ள 12 இடங்களுக்கு மட்டும் 19ம் தேதி கவுன்சிலிங் நடைபெறுகிறது.
இந்த ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் 83 ஆயிரத்து 552 மாணவ- மாணவிகள் சேர்ந்துள்ளனர்.
பொதுப்பிரிவில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 874 இடங்கள் உள்பட மொத்தம் 1 லட்சத்து 14 ஆயிரத்து 102 என்ஜினீயரிங் இடங்கள் இருந்தன. இவற்றில் சேர 1 லட்சத்து 31 ஆயிரத்து 708 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இவற்றில் 1.25 லட்சம் மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
அகாடமி பிரிவில் மட்டும் 1.2 லட்சம் மாணவர்கள் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டனர். இவர்களில் 40 ஆயிரம் மாணவர்கள் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை.
அகாடமி பிரிவில் அண்ணா பல்கலைக் கழகத்தில் 5715 இடங்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 4291 இடங்கள், சுயநிதிக்கல்லூரிகளில் 69 ஆயிரத்து 669 இடங்கள் என மொத்தம் 79 ஆயிரத்து 675 இடங்கள் நிரம்பின.
விளையாட்டில் 99 இடங்கள், தொழில் பிரிவில் 3482 இடங்கள், மற்ற மாநிலங்கள் பிரிவில் 45 இடங்கள் என மொத்தம் 83 ஆயிரத்து 552 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
30,199 காலியிடங்கள்...
இந்த ஆண்டு புதிதாக 92 என்ஜினீயரிங் கல்லூரிகள் தொடங்கபட்டதன் மூலம் கல்லூரிகளின் எண்ணிக்கை 447 ஆக அதிகரித்தது. இதனால் தற்போது 22 ஆயிரத்து 80 என்ஜினீயரிங் இடங்கள் கூடுதலாக கிடைத்தன. இதையடுத்து இந்த ஆண்டு என்ஜினீயரிங் காலி இடங்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 199 ஆக அதிகரித்துள்ளது.
இந்த இடங்கள் அனைத்தும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளை சேர்ந்தவை. கடந்த ஆண்டு 10 ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications