திருத்தணியில் பக்தர்கள் வெள்ளம்-4 லட்சம் பேர் தரிசனம்
திருத்தணி: ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்று ஒரே நாள் மட்டும் சுமார் 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் திருத்தணியும் ஒன்றும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆடி கிருத்திகையம், தெப்ப திருவிழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
ஆடி கிருத்திகையின் இரண்டாம் நாளான இன்று ஆடி பரணியாகும். இதையடுத்து தமிழகம் மட்டும் பக்கத்து மாநிலங்களில் இருந்தும் லட்சணக்கணக்கான பக்தர்கள் திருத்தணி வந்தனர்.
அவர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மயில் காவடி, அன்ன காவடி ஆகியவற்றுடன் ஆடி வந்தனர். மொட்டையடித்து, அலகு குத்தி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். உடுக்கை, பம்பை, சிலம்பாட்டம் உள்ளிட்ட தமிழரின் பாரம்பரிய ஆட்டத்துடன் பக்தி பாடல்களை இசைத்தவாரே வந்தனர்.
ஆடி பரணி விழாவை முன்னி்ட்டு மூலவருக்கு சந்தனக் காப்பு, பச்சை மாணிக்கம், மரகதத்தினால் ஆன தங்கக் கிரீடம், தங்கவேல், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த விழாவினை காண இன்று ஒரு நாள் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் பக்தர்கள் வந்திருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கூட்டம் அதிகமிருந்த காரணத்தால் மக்கள் பல மணி நேரம் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பாதுகாப்புக்காக 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications